News September 20, 2025
சுற்றுலா தளமாகும் மானத்தாள் ஏரி? அமைச்சர் ஆய்வு!

சேலம், தாரமங்கலம் அருகே உள்ள மானத்தாள் ஏரி இயற்கை அழகுடன் கூடிய ஒரு நீர்நிலையாகும். இதைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தி, பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்தினால், அது சேலம் மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என பொதுமக்கள் பலர் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News September 20, 2025
சேலத்தில் தவெக தலைவர் விஜய்?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் டிசம்பர் 13ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், வரும் செப்.27- ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. சேலத்தில் 2 இடங்களில் விஜய் மக்களைச் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News September 19, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்.19) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News September 19, 2025
சேலம்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்!

சேலம் மாநகராட்சியில் (19.09.2025)-ம் தேதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.