News September 20, 2025
வெற்றியை கொண்டாடி, வீரர்களை மதிக்க தவறுகிறோம்

அண்மையில் ஆசியக் கோப்பை வென்ற இந்திய அணியை நாம் எப்படி நடத்தினோம் தெரியுமா? அணியின் வெற்றியை பெருமையாக கொண்டாடிய நாம், வீரர்களை கண்டுகொள்ளவில்லை. ஹாக்கியில் man of the match வென்றால் பரிசுத்தொகை வெறும் ₹16,800 தான். ஆசியக் கோப்பை கிரிக்கெட் பரிசுத் தொகை ₹2.6 கோடியாம். ஹாக்கி விளையாட்டோ அரசு நிதி ஒதுக்கீட்டுக்காக காத்துக் கிடக்க, கிரிக்கெட்டோ பில்லியன் டாலர் டீலிங்கில் செழிக்கிறது. உங்க கருத்து?
Similar News
News September 20, 2025
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக டெல்லியில் போராட்டம்: திருமா

காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிராக சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமா, மத்திய அரசு நீதியின் பக்கம் நிற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பாலஸ்தீனத்தில் நடப்பதை பற்றி யாரும் வாய் திறக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், டெல்லியில் போராட்டம் நடத்தி அங்குள்ளவர்களை பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க வைப்போம் எனத் தெரிவித்தார்.
News September 20, 2025
அனிருத் உடன் போட்டியா? சாய் கொடுத்த ரியாக்ஷன்

‘பல்டி’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. அப்போது, இப்படத்தில் இசையமைத்த சாய் அபயங்கரிடம், உங்களுக்கும் அனிருத்துக்கும் போட்டி என்று விமர்சிக்கப்படுகிறதே என கேட்கப்பட்டது. அதற்கு, அனிருத் நிறைய செய்துவிட்டார், நான் இப்போதுதான் ஆரம்பிக்கிறேன். எங்களுக்குள் போட்டி என்றெல்லாம் எதுவும் கிடையாது, நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
News September 20, 2025
ஆண்களே இவற்றை செய்யுங்கள்

உள்ள அழகை மேலும் மெருகேற்ற சில எளிய வழிகள் உள்ளன. குறிப்பாக நீங்கள் அணியும் ஆடை, ஆபரணங்களில் சற்று கவனம் செலுத்தினால் போதும். சரியான ஆடை அணிவதால் பிறரிடம் நன்மதிப்பு கிடைப்பது மட்டுமில்லாமல், உங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். இதற்கு நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று மேல் உள்ள புகைப்படங்களில் காணலாம்.