News September 20, 2025
19 மாவட்டங்களில் மழை வெளுக்கும்: IMD

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஊரில் இப்போ மழை வந்தா லைக் பண்ணுங்க.
Similar News
News September 20, 2025
ரேபிஸ் தடுப்பூசி போட்டும் உயிரிழப்பது ஏன்?

நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர், ரேபிஸ் தடுப்பூசி போட்டும், உயிரிழந்தது குறித்து பொது சுகாதாரத்துறை ஆய்வு செய்து வருகிறது. தமிழகத்தில் இந்தாண்டில் 3.80 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே தடுப்பூசி வேலை செய்யவில்லை என கூற முடியாது எனவும், உயிரிழந்தவர்கள் முறையான சிகிச்சை பெற்றனரா என்பது ஆய்வு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
News September 20, 2025
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக டெல்லியில் போராட்டம்: திருமா

காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிராக சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமா, மத்திய அரசு நீதியின் பக்கம் நிற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பாலஸ்தீனத்தில் நடப்பதை பற்றி யாரும் வாய் திறக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், டெல்லியில் போராட்டம் நடத்தி அங்குள்ளவர்களை பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க வைப்போம் எனத் தெரிவித்தார்.
News September 20, 2025
அனிருத் உடன் போட்டியா? சாய் கொடுத்த ரியாக்ஷன்

‘பல்டி’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. அப்போது, இப்படத்தில் இசையமைத்த சாய் அபயங்கரிடம், உங்களுக்கும் அனிருத்துக்கும் போட்டி என்று விமர்சிக்கப்படுகிறதே என கேட்கப்பட்டது. அதற்கு, அனிருத் நிறைய செய்துவிட்டார், நான் இப்போதுதான் ஆரம்பிக்கிறேன். எங்களுக்குள் போட்டி என்றெல்லாம் எதுவும் கிடையாது, நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.