News September 20, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (செப்.19) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம், காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News November 11, 2025
கங்கை கொண்டான் ரயில்வே கேட் இன்று மூடல்

நெல்லை அருகே கங்கைகொண்டான் – கைலாசபுரம் இடையேயான 7-வது ரயில்வே கேட், தண்டவாளம் புதுப்பிக்கும் பணிக்காக இன்று (நவ.11) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மூடப்படுகிறது. பொதுமக்கள் மாற்று வழியைப பயன்படுத்தும்படி நெல்லை ரயில்வே பொறியியல் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.
News November 11, 2025
நெல்லையில் பெண் தீக்குளித்து தற்கொலை

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரத்தை சேர்ந்த அமுதவள்ளி மகள் உடல் நல குறைவால் கடந்த ஆண்டு அம்பையில் உயிரிழந்தார். இதனால் தீராத சோகத்தில் ஒராண்டாக வசித்து வந்த அமுதவள்ளி நேற்று அதிகாலை வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார். இதுக்குறித்து வி கே புரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
News November 11, 2025
நெல்லையில் இருவர் மீது குண்டாஸ்

தச்சநல்லூரை சேர்ந்த முத்துகுமார் மகன் ஹரிஹரன்(25) மற்றும் ராஜவல்லிபுரத்தை சேர்ந்த அருண்குமார் (35) ஆகியோர் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்தனர். எனவே இருவரும் துணை ஆணையர் மற்றும் ஆய்வாளர் பரிந்துரையின் பேரில் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மற்றும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.


