News September 20, 2025
ஆஸ்கர் விருதுக்கு ‘ஹோம்பவுண்ட்’ படம் பரிந்துரை

2026 ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பில் ‘ஹோம்பவுண்ட்’ என்ற ஹிந்தி படம் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நீரஜ் கய்வான் இயக்கத்தில் இஷான் கட்டர், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பாகவே இப்படம் கான் உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பாராட்டுகளை பெற்ற நிலையில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Similar News
News September 20, 2025
கதை கூட சொல்ல வேண்டாம் நடிக்க ரெடி: அர்ஜுன் தாஸ்

கைதி, மாஸ்டர் படங்களில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்த அர்ஜுன் தாஸ், தற்போது தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனால், லோகேஷ் கனகராஜ் கூப்பிட்டால் எந்த கேரக்டரிலும் நடிக்க தயார் என்று தெரிவித்துள்ளார். லோகேஷ் தனக்கு கதை கூட சொல்ல வேண்டிய தேவையில்லை எனவும், சினிமாவில் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் என்பதால், கண்ணை மூடிக்கொண்டு கேள்வி கேட்காமல் நடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
News September 20, 2025
செப்டம்பர் 20: வரலாற்றில் இன்று

*1857 – கிழக்கிந்தியக் கம்பெனிக்கு விஸ்வாசமான படைகள் டெல்லியைக் கைப்பற்றின. முதல் இந்திய சுதந்திர போர் முடிவுக்கு வந்தது. *1878 – தி இந்து செய்தி நிறுவனம் முதலாவது இதழ் வெளியிடப்பட்டது. *1971- தமிழ் திரைப்பட இயக்குநர் மிஷ்கின் பிறந்தநாள். *1990 – இலங்கை சவுக்கடி கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30 தமிழர்கள் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, தீயிட்டு எரிக்கப்பட்டனர்.
News September 20, 2025
டீல் பேச அமெரிக்கா செல்லும் அமைச்சர்

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அடுத்த சில நாள்களில் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, வர்த்தகம் தொடர்பாக, கடந்த 16-ம் தேதி அமெரிக்க அதிகாரிகள் இந்தியா வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சரின் அமெரிக்க பயணம் என்பது, இருநாடுகளுக்கு இடையேயான 6-வது சுற்று வர்த்தக பேச்சுவார்த்தையாக அமைய உள்ளது.