News September 19, 2025
அனைத்து பள்ளிகளிலும் புதிய மாற்றம்!

பெற்றோர் – ஆசிரியர் சங்க நிர்வாகியாக தற்போது பயிலும் மாணவர்களின் பெற்றோர்களே நிர்வாகியாக இருக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. படித்து முடித்து வெளியேறிய மாணவர்களின் பெற்றோர்கள் நிர்வாகியாக இருக்கக் கூடாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 20, 2025
டீல் பேச அமெரிக்கா செல்லும் அமைச்சர்

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அடுத்த சில நாள்களில் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, வர்த்தகம் தொடர்பாக, கடந்த 16-ம் தேதி அமெரிக்க அதிகாரிகள் இந்தியா வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சரின் அமெரிக்க பயணம் என்பது, இருநாடுகளுக்கு இடையேயான 6-வது சுற்று வர்த்தக பேச்சுவார்த்தையாக அமைய உள்ளது.
News September 20, 2025
ஓஷோ பொன்மொழிகள்

*பயம் முடிகிற இடத்தில் வாழ்க்கைத் தொடங்குகிறது. *யாரோ ஒருவராகும் எண்ணத்தைக் கைவிடுங்கள். நீங்கள் ஏற்கனவே ஒரு தலைசிறந்த படைப்பு. உங்களிடம் மேம்படுத்த எதுவுமில்லை. விஷயம் என்னவெனில் இதை நீங்கள் உணர்ந்து, புரிந்து, ஏற்பது மட்டுமே. *காதலில் விழுவதன் மூலம் நீங்கள் குழந்தையாகவே இருக்கிறீர்கள். *உண்மை என்பது வெளியில் கண்டுபிடிக்கப்பட வேண்டியதில்லை. உள்ளூர உணரப்பட வேண்டியது.
News September 20, 2025
என் மனைவி பெண் தான்: ஆதாரங்களை வழங்கும் அதிபர்

தனது மனைவி பிரிகிட் பெண் என்பதை நிரூபிக்கும் வகையில் அறிவியல் பூர்வமான ஆதாரங்களை வழங்க, ஃபிரான்ஸ் அதிபர் மேக்ரான் திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவில் 45 லட்சம் ஃபாலோயர்களை கொண்ட யூடியூபர் கேண்டஸ் ஓவன், மேக்ரானின் மனைவி ஆணாக பிறந்து, பெண்ணாக மாறிய திருநங்கை என வீடியோ வெளியிட்டு இருந்தார். இதை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்த மேக்ரான், ஆதாரங்களை வழங்க திட்டமிட்டுள்ளார்.