News September 19, 2025
தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய அன்பில்.

வேலூர் பள்ளிகொண்டாவில் உள்ள சிக்ஷகேந்திரா பள்ளியில் இன்று (செப்டம்பர் 19 ) நடைபெற்ற மாநில அளவிலான அடைவுத் தேர்வு குறித்த மீளாய்வு கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். இதில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் (இராணிப்பேட்டை) வளர்மதி பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News September 20, 2025
வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் செப்ட. 19 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்.
News September 20, 2025
தூய்மை பணியாளர்கள் குறைகேட்பு கூட்டம்

வேலூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று செப் (19) நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கான குறைகேட்பு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தூய்மை பணியாளர்களிடம் மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மதுசெழியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
News September 19, 2025
வேலூர் மாவட்டத்திற்கு முதல்வர் சூப்பர் அறிவிப்பு

சென்னை கிண்டியில் சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 19) திறந்து வைத்தார். அப்போது வேலூர் மாவட்டம் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலு நாச்சியார் பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வேலூர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.