News September 19, 2025
ஷூட்டிங்கில் காயமடைந்த ஜூனியர் என்டிஆர்

விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்.டி.ஆருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி அவர் அடுத்த சில வாரங்களுக்கு ஓய்வில் இருப்பார் என்றும் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊகங்களின் அடிப்படையில் ஜூனியர் என்டிஆரின் உடல்நிலை குறித்த கருத்துகளை தவிர்க்குமாறு ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 20, 2025
என் மனைவி பெண் தான்: ஆதாரங்களை வழங்கும் அதிபர்

தனது மனைவி பிரிகிட் பெண் என்பதை நிரூபிக்கும் வகையில் அறிவியல் பூர்வமான ஆதாரங்களை வழங்க, ஃபிரான்ஸ் அதிபர் மேக்ரான் திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவில் 45 லட்சம் ஃபாலோயர்களை கொண்ட யூடியூபர் கேண்டஸ் ஓவன், மேக்ரானின் மனைவி ஆணாக பிறந்து, பெண்ணாக மாறிய திருநங்கை என வீடியோ வெளியிட்டு இருந்தார். இதை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்த மேக்ரான், ஆதாரங்களை வழங்க திட்டமிட்டுள்ளார்.
News September 20, 2025
ராணுவம் vs தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு

J&K கிஷ்த்வார் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த உளவு தகவலை அடுத்து, ராணுவம் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது, தீடீரென தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு வீரர்களும் எதிர்தாக்குதலை நடத்தினர். ராணுவத்தினரின் தாக்குதலை சமாளிக்கமுடியாத தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பியோடி நிலையில், அவர்களின் ஆயுதங்களை கைப்பற்றிய ராணுவம் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தியுள்ளது.
News September 20, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை. ▶குறள் எண்: 464 ▶குறள்: தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர். ▶பொருள்: களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.