News September 19, 2025
ஆசிய கோப்பை: இந்தியா பேட்டிங்

ஆசிய கோப்பையில், ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணி ஏற்கெனவே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டதால், இது சம்பிரதாய மோதலாகவே பார்க்கப்படுகிறது. ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன் இந்தியா களம் காணுகிறது. இந்திய அணியில் 2 மாற்றங்களாக பும்ராவுக்கு பதில் ஹர்ஷித் ராணா, வருணுக்கு பதில் அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Similar News
News September 20, 2025
அடுத்த ஆண்டு சீனா செல்லும் டிரம்ப்

இந்தியா உடன் விரோதத்தை வளர்க்கும் டிரம்ப், சீனாவுடன் நட்பை வளர்க்கிறார். கடந்த 3 மாதங்களில் முதல் முறையாக சீன அதிபர் ஜின்பிங்குடன் அவர் தொலைபேசியில் பேசியுள்ளார். பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தென் கொரியாவில் நடக்க உள்ள ஆசிய பசிபிக் வர்த்தக கூட்டமைப்பு மாநாட்டில் சீன அதிபரை சந்திக்க உள்ளதாகவும், சீனாவிற்கு அடுத்த ஆண்டு பயணம் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.
News September 20, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 20, புரட்டாசி 4 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சதுர்தசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை.
News September 20, 2025
இசையால் அவர் நினைவில் இருப்பார்: PM இரங்கல்

பிரபல பாடகர் <<17761763>>ஜுபின் கார்க்<<>> உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக PM மோடி தெரிவித்துள்ளார். இந்திய இசை துறையில் ஜுபின் ஆற்றிய பங்களிப்பிற்காக எப்போதும் நினைவுகூரப்படுவார் எனவும், அனைத்து தரப்பு மக்களையும் தனது குரலால் கவர்ந்தார் என்றும் கூறி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் விபத்தில் உயிரிழந்த ஜுபின் தமிழ், அசாமி, ஹிந்தி என 40 மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.