News September 19, 2025

திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மை இயக்கம் உறுதிமொழி!

image

தூய்மை தமிழ்நாடு நிறுவனம் சார்பில், தூய்மை இயக்கம் 2.O முன்னெடுப்பில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பதற்காக மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் மாநகராட்சி ஊழியர்களுடன், உறுதிமொழி இன்று (செப்-19) எடுத்துக் கொண்டனர். உடன், துணை மேயர் ராஜப்பா, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன், அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News September 20, 2025

திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை நேற்று இரவு 11 மணி முதல் சனிக்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், மற்றும் வேடசந்தூர், ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 19, 2025

திண்டுக்கல்: இளநிலை வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

image

திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலகில் நிர்வாக நலன் கருதி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் இன்று நான்கு இளநிலை வருவாய் ஆய்வாளர்களை பணியிடம் மாற்றம் செய்து உள்ளார். பழனியில் பணி புரியும் முகமது சுல்தான், சுரேஷ் குமார், பிரதீப் ஜெகதீசன், செ.பாரதி ஆகியோர் திண்டுக்கல் பழனி ஆகிய இடங்களுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News September 19, 2025

திண்டுக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன் தலைமையில் இன்று (19.09.2025) நடைபெற்றது. அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, துணை ஆட்சியர் (பயிற்சி) ராஜேஸ்வரி சுவி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஸ்ரீ ராகவ் பாலாஜி, இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) பாண்டியன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!