News September 19, 2025
வாணியம்பாடியில் திருநங்கைகள் சாலைமறியல்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட நியுடவுன் பகுதியில், கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட திருநங்கைகள், இன்று சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் தண்ணீர் தேக்கத்தை சீரமைக்காததால் ஆத்திரமடைந்த அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Similar News
News September 20, 2025
பள்ளி வகுப்பறையை திறந்து வைத்த எம்.எல்.ஏ.

திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 30,31, வது வார்டு பகுதியில் உள்ள நகராட்சி தொடக்க பள்ளிக்கு, பள்ளி மேம்பாட்டு நிதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடத்தை இன்று (19) திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பிஅவர்கள் பள்ளி மாணவர்களுடன் இணைந்து திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார் இதில் திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதாவெங்கடேஷ் மற்றம் ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.
News September 20, 2025
இரவு ரோந்து பணி விவரம்

திருபத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அவசர காலத்தில் மக்கள் உட்கோட்ட காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
News September 20, 2025
மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் ஆய்வு

திருப்பத்தூரில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் (மஞ்சள் குடோனில்) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பு அறையை இன்று (19) மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சிவசௌந்தரவள்ளி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மூன்றாம் காலாண்டு ஆய்வு மேற்கொண்டார்.