News September 19, 2025
மலச்சிக்கலால் இறப்பு ஏற்படுமா? பகீர்!

அதிகமாக அழுத்தம் கொடுத்து மலம் கழித்தால் இறந்துகூட போகலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். இப்படி செய்வதால் இதயத்துக்கு செல்லும் ரத்தம் குறைவதோடு, மூளைக்கு போகும் ஆக்சிஜன் தட்டுப்படுமாம். இதனால் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கானோர் பாத்ரூமிலேயே மயங்கி விழுவதாகவும், அரிதான நேரங்களில் இறப்பதாகவும் டாக்டர்கள் சொல்கின்றனர். குறிப்பாக, இதயநோயாளிகள் அதிக ரிஸ்க்கில் இருப்பதாகவும் எச்சரிக்கின்றனர். SHARE.
Similar News
News September 20, 2025
வெற்றியை கொண்டாடி, வீரர்களை மதிக்க தவறுகிறோம்

அண்மையில் ஆசியக் கோப்பை வென்ற இந்திய அணியை நாம் எப்படி நடத்தினோம் தெரியுமா? அணியின் வெற்றியை பெருமையாக கொண்டாடிய நாம், வீரர்களை கண்டுகொள்ளவில்லை. ஹாக்கியில் man of the match வென்றால் பரிசுத்தொகை வெறும் ₹16,800 தான். ஆசியக் கோப்பை கிரிக்கெட் பரிசுத் தொகை ₹2.6 கோடியாம். ஹாக்கி விளையாட்டோ அரசு நிதி ஒதுக்கீட்டுக்காக காத்துக் கிடக்க, கிரிக்கெட்டோ பில்லியன் டாலர் டீலிங்கில் செழிக்கிறது. உங்க கருத்து?
News September 20, 2025
19 மாவட்டங்களில் மழை வெளுக்கும்: IMD

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஊரில் இப்போ மழை வந்தா லைக் பண்ணுங்க.
News September 20, 2025
கடம்ப மரம் நட்ட PM மோடி

டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடம்ப மரம் நட்டதாக பிரதமர் மோடி X-ல் பதிவிட்டுள்ளார். பிரிட்டிஷ் அரசர் மூன்றாம் சார்லஸ் பரிசாக கொடுத்த அந்த மரத்தை எண் 7, லோக் கல்யான் மார்க்கில் (பிரதமரின் அலுவல்பூர்வ இல்லம்) நட்டு நீரூற்றியதாக குறிப்பிட்ட மோடி, மன்னர் சார்லஸ் உடனான சந்திப்பின் போது சுற்றுச்சூழல் மற்றும் அதை பராமரிப்பது தொடர்பாக பேசியதாக அவர் தெரிவித்துள்ளார்.