News September 19, 2025
திருப்பூர் மக்களே இனி எளிதாகிறது!

பொதுமக்களின் பயண வசதிக்காக ரயில்வே துறையுடன் இணைந்து ரயில் பயணிகள் முன்பதிவு சேவை இந்திய அஞ்சல் துறை மூலம் திருப்பூர் காந்தி நகரில் உள்ள தபால் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு, தக்கல் முன்பதிவு சேவைகள் எளிதாக வழங்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் பகுதி பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 19, 2025
திருப்பூரில் இரவு ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்
News September 19, 2025
மாவட்ட காவல் துறையின் இரவு ரோந்து பணி விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 19.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம்,உடுமலை, அவினாசி,பல்லடம், தாராபுரம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது மேலும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்
News September 19, 2025
திருப்பூர் கலெக்டர், மேயர் உள்ளிட்டோர் உறுதிமொழி

திருப்பூர்: தூய்மை மிஷன் இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த இரண்டு நாடாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பயன்படுத்தப்படாத கழிவுப்பொருட்கள் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று மாவட்ட கலெக்டர் , மாநகராட்சி ஆணையாளர் , மேயர் உள்ளிட்டோர் தூய்மை பாரத இயக்கம் குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.