News September 19, 2025
மீண்டும் உயர தொடங்கிய அதானி குழும பங்குகள்

வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை தொடங்கி, செயற்கையான முறையில் அதானி குழுமம் பங்குகளில் முதலீடு செய்வதாக ஹிண்டன்பெர்க் நிறுவனம் குற்றம்சாட்டி இருந்தது. ஆனால் அது தவறான குற்றச்சாட்டு என செபி நேற்று விரிவான அறிக்கையை வெளியிட்டது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் இன்று லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. அதானி குழுமத்தின் பங்குகள் 10% வரை உயர்வுடன் வா்த்தகத்தை தொடங்கியுள்ளன.
Similar News
News September 19, 2025
முடி கொட்டுதா? இந்த சீப்பை யூஸ் பண்ணுங்க

சரியான சீப்பை பயன்படுத்தவில்லை என்றால் கூட முடி உதிர்வு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். உங்களுக்கான சரியா சீப்பு எது என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள். ➤சுருள் முடி – Wooden comb ➤மென்மையான முடி – boar bristle hair brush ➤அடர்த்தியான மற்றும் நார் போன்ற முடி – Boar + Nylon Pin கொண்ட Hairbrush ➤நீண்ட & நேரான கூந்தலுக்கு – Paddle HairBrush. இந்த தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க.
News September 19, 2025
இன்னும் ரீபண்ட் வரலையா? இது காரணமாக இருக்கலாம்

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்த பலருக்கும் இன்னும் ரீபண்ட் வரவில்லை. அதற்கு இதெல்லாம் காரணமாக இருக்கலாம்: *தகவல் மிஸ்மேச் (அ) சிஸ்டம் எர்ரர் *e-Verification செய்யாதது *வங்கிக் கணக்கு வேலிடேட் செய்யாதது *கடந்த ஆண்டின் வரி நிலுவை *PAN-Aadhaar லிங்க் பிரச்னை (அ) பெயர் மிஸ்மேச்) *கடைசி நாளில் தாக்கல் செய்வது *ஆப்லைனில் தாக்கல் செய்வது *உங்கள் ரீபண்ட் தணிக்கை / விசாரணையில் இருக்கலாம்.
News September 19, 2025
புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை?

பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை புதிய கட்சி தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மை காலமாக கட்சியில் இருந்து சற்று ஒதுங்கி இருக்கும் அவர், தனது அரசியல் நகர்வுகள் குறித்து ரஜினியிடம் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. பாஜகவில் தனக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதாக ரஜினியிடம் அவர் கூறியுள்ளாராம். இதனை டெல்லி தலைமைக்கு கூறுமாறு அண்ணாமலை தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.