News September 19, 2025

மதுரை: கொலை செய்தவர்களை கைது செய்ய கோரி மறியல்

image

மேலூர் அருகே புது சுக்காம்பட்டியை சேர்ந்தவர் ராம் பிரசாத்(27). இவருக்கும் வினோபா காலனியைச் சேர்ந்த சிலருக்கும் பிரச்சனை ஏற்பட, அவர்கள் ராம்பிரசாத்தை தாக்கினர். மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று அதிகாலை இறந்து போனார். இதனை தொடர்ந்து ராம் பிரசாத்தின் உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி மேலூர் பஸ்ஸ்டாண்ட் அருகே மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News September 19, 2025

மதுரையில் அண்ணா பதக்கங்கள் பெற்ற மூவருக்கு பாராட்டு

image

மதுரை மாநகரில் 2025ம் ஆண்டிற்கான தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை தெற்கு காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன், மதுரை மாநகர் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் எஸ்தாரணி, மாட்டுத்தாவணி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் இவ்விருதை பெற்றனர். இவர்களை காவல் துறையினர் பாராட்டினர்.

News September 19, 2025

மதுரையில் கள்ளக்காதலன் தலையில் கல்லை போட்ட பெண்

image

வண்டியூர் பொன்ராம் மகன் அரவிந்த் சரத். இவர் 2019ல் திருமணம் செய்து பிரிந்து வாழ்ந்தார். பின் தன்னுடன் கட்டட வேலைபார்த்த மணிகண்டன் மனைவி பூபதியுடன் 29, பழகி அதலை பகுதியில் இருவரும் வசித்தனர். பூபதி நடத்தையில் அரவிந்த்சரத் சந்தேகப்பட்டு தகராறு செய்து தாக்கி வந்துள்ளார். இந்நிலையில் செப்.17 இரவு அரவிந்த் தலையில் பூபதி கல்லை துாக்கி போட்டதில் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

News September 19, 2025

மதுரை-குருவாயூர் ரயில் பகுதியளவு ரத்து

image

மதுரையில் இருந்து ராஜபாளையம், செங்கோட்டை வழியாக குருவாயூர் செல்லும் ரெயில் (வ.எண்.16327) நாளை (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும் கொல்லம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் குருவாயூர்-மதுரை ரெயில் (வ.எண். 16327) வருகிற 21-ந் தேதி குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கொல்லத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு மதுரை புறப்படும்.

error: Content is protected !!