News September 19, 2025
கடலூர்: வைரஸ் காய்ச்சல், முக்கிய தகவல்!

கடலூர் மக்களே, தற்போது தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சளி, இருமல் மற்றும் வைரஸ் காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால், உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து உங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!
Similar News
News November 8, 2025
கடலூர்: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

கடலூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <
News November 8, 2025
கடலூர் கலெக்டர் கடும் எச்சரிக்கை

கடலூர் மாவட்டத்தில், உணவுப் பொருட்களை பார்சல் செய்ய தரமற்ற பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்திய 9 உணவகங்களுக்கு ரூ.12,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தும் வணிகர்கள் மற்றும் உணவகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.
News November 8, 2025
கடலூர்: 8.5 சவரன் நகை மாயம்

புதுச்சேரியைச் சேர்ந்த பாஸ்கர்(57) என்பவர், தனது மனைவி மகாலட்சுமியுடன் சிதம்பரத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு விசேஷத்திற்கு அரசு பேருந்து புதுச்சேரியில் இருந்து சிதம்பரம் வந்தார். பின் சிதம்பரம் கஞ்சி தொட்டி முனையில் இருந்து ஆட்டோவில் சென்றார்.அப்போது பையில் வைத்திருந்த 8 1/2 பவுன் நகை காணவில்லை. என தெரியவந்தது. பின் இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


