News September 19, 2025
₹36 கோடி வருமான வரி: ஜெ.தீபா வழக்கு தள்ளுபடி

ExCM ஜெயலலிதா செலுத்த வேண்டிய ₹36 கோடி வருமான வரி பாக்கியை செலுத்தக் கோரி, ஜெ.தீபாவுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் விசாரணையில், வரித் தொகையை ₹13 கோடியாக குறைத்துவிட்டதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Similar News
News September 19, 2025
புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை?

பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை புதிய கட்சி தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மை காலமாக கட்சியில் இருந்து சற்று ஒதுங்கி இருக்கும் அவர், தனது அரசியல் நகர்வுகள் குறித்து ரஜினியிடம் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. பாஜகவில் தனக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதாக ரஜினியிடம் அவர் கூறியுள்ளாராம். இதனை டெல்லி தலைமைக்கு கூறுமாறு அண்ணாமலை தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News September 19, 2025
₹175 கோடி சம்பளம் வாங்கும் அஜித்?

நடிகர் அஜித் தன்னுடைய சம்பளத்தை ₹25 கோடி உயர்த்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ரேஸிங்கில் கவனம் செலுத்தி வரும் அவர், அக். மாதத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே ₹150 கோடி வாங்கி கொண்டிருந்த அஜித், இந்த படத்திற்கு ₹175 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். ‘குட் பேட் அக்லி’ பெற்ற வெற்றியினால் தயாரிப்பு நிறுவனமும் ஒகே சொல்லியதாக தகவல்.
News September 19, 2025
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது?

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது என்பதற்கான ஆன்மிக காரணம் உங்களுக்கு தெரியுமா? ஜோதிடத்தில் கன்னி ராசியின் அதிபதியான புதன், விஷ்ணு பகவானின் சொரூபமாகவும், பெருமாளுக்கு உரிய கிரகமாகவும் பார்க்கப்படுகிறார். புதன் சைவப்பிரியர் என்ற காரணத்தால் அவர் ஆட்சி செய்யும் கன்னி ராசிக்கான புரட்டாசி மாதத்தில், அசைவ உணவுகள் தவிர்க்கப்படுவதாக முன்னோர்கள் கூறுகின்றனர்.