News September 19, 2025

செங்கோட்டையன் விவகாரம்: அதிமுக அவசர ஆலோசனை

image

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் AK செல்வராஜ் தலைமையில் கோபி அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. செங்கோட்டையனுக்கு மாற்றாக நியமிக்கப்பட்ட இவரை கடந்த வாரம் செங்கோட்டையனின் ஆதரவாளராக இருந்த MLA பண்ணாரி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு அளித்திருந்தனர். கட்சியிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்படலாம் என பேசப்பட்டு வரும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் கவனத்தை பெற்றுள்ளது.

Similar News

News September 19, 2025

பார்க்க வேண்டிய இயற்கை அதிசயங்கள் PHOTOS

image

உலகின் சிறந்த படைப்பாளி இயற்கை தான். அவற்றில் சிலவற்றை உங்களுக்காக வழங்குகிறோம். *வடதுருவ விண்ணொளி, கொலம்பியாவின் கானோ கிரிஸ்டல்ஸ், டர்க்விஸ் பளிங்கு ஐஸ், பியூஜியாமா சிகரத்தின் மீது அதிசய மேக அடுக்கு, வானவில் மலைகள், மாபெரும் நீல பள்ளம், மாலத்தீவின் ஒளிரும் கடற்கரை, ஆண்டிலோப் மலையிடுக்கு, பளிங்கு ஏரி, நீல எரிமலைக் குழம்பு – இதில் உங்களுக்கு பிடித்தது என்ன? பார்த்துவிட்டு Comment-ல் சொல்லுங்கள்.

News September 19, 2025

தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து

image

தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ECI ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத காரணத்தாலும், தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாததாலும் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியளவில் மொத்தம் 474 கட்சிகளை நீக்கியுள்ளதாக ECI கூறியுள்ளது. ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 334 கட்சிகள் நீக்கப்பட்டன.

News September 19, 2025

ரோபோ சங்கரின் மகிழ்ச்சியான தருணங்கள்!

image

அனைவரையும் சிரிக்க வைத்த ஒரு உன்னத கலைஞனை இழந்திருக்கிறது தமிழ் திரையுலகம். மறைந்த ரோபோ சங்கரின் பழைய போட்டோஸ் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. குடும்பத்தினருடன் அவர் இருந்தது, ஆரம்ப காலத்தில் மேடை நிகழ்ச்சிகளில் கலக்கியது உள்ளிட்ட போட்டோஸை நெட்டிசன்கள் பகிர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலே இருக்கும் படங்களை நீங்களும் ஸ்வைப் செய்து பாருங்கள்.

error: Content is protected !!