News September 19, 2025

நெல்லை மாணவர்கள் சாதனை!

image

நெல்லை என்.சி.சி மாணவர்கள் மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்று சாதனை; 50வது தமிழக துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர். நெல்லை 5 தமிழக பட்டாலியன் என்.சி.சி., மாணவர்கள் 3 பேர் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றனர். பாளை., தனியார் கல்லூரி மாணவி பிரியங்கா 3பி ஓபன் சைட் ஜூனியர் பிரிவில் தங்கபதக்கம், புரோன் ஓபன் சைட்டில் வெண்க லபதக்கம் வென்றார்.

Similar News

News September 19, 2025

நெல்லை: 21 போக்சோ குற்றவாளிகளுக்கு தண்டனை – எஸ்.பி

image

நெல்லை மாவட்டத்தில் 2025ம் வருடத்தில் மட்டும் இதுவரை 20 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 21 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பாகஒரு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது. இத்தகவலை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் இன்று வெளியிட்டார்.

News September 19, 2025

நெல்லை: வீடுகளில் தொடர் கொள்ளை – மக்களே உஷார்

image

நெல்லை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவின் பேரில் இரவு நேர கண்காணிப்பை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதில் கடந்த ஒரு மாதத்தில் 6 வீடுகளில் நடந்த கொள்ளை, கொள்ளை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 22 கிராம் தங்க நகை, 500 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆணையாளர் தெரிவித்தார்.

News September 19, 2025

நெல்லை: EXAM இல்லாத அரசு துறை வேலை! APPLY

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 160 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. B.E படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது 4 வருட ஒப்பந்த வேலையாகும். மாத சம்பளம் – ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு தேர்வு கிடையாது. அக். 22க்குள் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லாத மத்திய அரசு வேலை. எல்லோருக்கும் SHARE பண்ணு

error: Content is protected !!