News September 19, 2025
பிஹாரில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ₹1000

20-25 வயதுக்குட்பட்ட வேலையில்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படும் என பிஹார் CM நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். முன்னதாக, 10, 12-வது தேர்ச்சி பெற்று, உயர்கல்வி படிக்கமுடியாத வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பட்டதாரிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் வேலையில்லாதவர்களுக்கு ₹600 வழங்கப்படுகிறது.
Similar News
News April 11, 2026
தமிழகம் வரும் பிரதமர் மோடி

ஏப்.15-ம் தேதியன்று நாகர்கோவிலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். வேப்பமூடு பகுதியிலிருந்து வடசேரி வரை ரோடு ஷோ செய்கிறார். பின்னர், குமரி மாவட்ட வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார். இதற்காக திருவனந்தபுரம் ஏர்போர்ட் வந்து, அங்கிருந்து போலீஸ் ஆயுதப்படை மைதானத்திற்கு ஹெலிகாப்டரில் வந்திறங்குகிறார். கடந்த 2 மாதங்களில் 4-வது முறையாக மோடி தமிழகம் வருகிறார்.
News April 11, 2026
நிலவை விற்று ₹100 கோடி சம்பாதித்த நபர்..

சாதாரண கார் விற்பனையாளராக இருந்த ஒருவர் நிலவை விற்று கோடிகள் சம்பாதித்த கதை சினிமாவை விட சுவாரஸ்யம். 1980-ல் டென்னிஸ் ஹோப் என்பவர் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி நிலவை தன்னுடையது என அறிவித்தார். பிறகு, ‘Lunar Embassy’ நிறுவனத்தை உருவாக்கி நிலவை Plot போட்டு விற்று ₹100 கோடிக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளார். ஆனால் இது சட்டபூர்வமாக செல்லாது என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
News April 11, 2026
இலவசம் வேண்டாம்! தேர்தல் களத்தில் இறங்கிய தாய், மகள்

தேர்தல் வந்துவிட்டாலே, வாக்குகளை பெறுவதற்காக அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகளை கொடுப்பது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், வரி என்ற பெயரில் பணத்தை பிடுங்கி, இலவசம் என்ற பெயரில் ஓட்டுக்காக வாக்குறுதி தரும் திறனற்ற அரசியலை எதிர்ப்பதாக கூறி, தாயும் மகளும் சுயேச்சையாக களமிறங்கியுள்ளனர். CM போட்டியிடும் கொளத்தூரில் மகள் ஸ்டெபியும், ஆலந்தூரில் தாய் செங்கொடி விஜயலட்சுமியும் போட்டியிடுகின்றனர்.


