News April 12, 2024

சிவகங்கை: 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 8, 2025

சிவகங்கை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி!

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>tabcedco.net<<>> என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News December 8, 2025

சிவகங்கை: பூட்டிய வீட்டில் 3 பவுன் நகை கொள்ளை

image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டியைச் சேர்ந்த சாத்தப்பன் குடும்பத்துடன் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். திருக்கார்த்திகைக்காக ஊருக்கு வந்து தீபம் ஏற்றிய பின் மீண்டும் கோயம்புத்தூருக்கு சென்ற நிலையில், அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். இது குறித்து கண்டவராயன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 8, 2025

சிவகங்கை: செய்தியாளரின் கண்கள் தானம்.!

image

திருப்புவனத்தில் தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த கண்ணன் என்பவர், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது திடீர் மறைவால் குடும்பத்தினரும், நண்பர்களும், சக ஊழியர்களும் கடும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கண்ணனின் குடும்பத்தினர் மனிதாபிமானத்துடன் அவரது கண்களை தானமாக வழங்கினர். இதன்மூலம் இரண்டு பேருக்கு பார்வை கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

error: Content is protected !!