News September 19, 2025

12வது தேர்ச்சி போதும்.. ₹35,000 சம்பளத்தில் வேலை!

image

IGI Aviation Services-ல் காலியாக உள்ள 1,017 Ground Staff பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18- 30 வயதுக்குட்பட்ட 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து & நேர்முக தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும். ₹25,000- ₹35,000 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். முழு விவரங்களுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும்.

Similar News

News September 19, 2025

ரோபோ சங்கரின் மகிழ்ச்சியான தருணங்கள்!

image

அனைவரையும் சிரிக்க வைத்த ஒரு உன்னத கலைஞனை இழந்திருக்கிறது தமிழ் திரையுலகம். மறைந்த ரோபோ சங்கரின் பழைய போட்டோஸ் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. குடும்பத்தினருடன் அவர் இருந்தது, ஆரம்ப காலத்தில் மேடை நிகழ்ச்சிகளில் கலக்கியது உள்ளிட்ட போட்டோஸை நெட்டிசன்கள் பகிர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலே இருக்கும் படங்களை நீங்களும் ஸ்வைப் செய்து பாருங்கள்.

News September 19, 2025

உழவர்களுக்கு துரோகம் இழைக்கும் திமுக: அன்புமணி

image

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்காமல் திமுக அரசு துரோகம் செய்வதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 9 மாதங்களாகியும் இழப்பீடு வழங்கப்படவில்லை எனவும் ஏக்கருக்கு அறிவித்த ₹6,800 இழப்பீடு தொகை போதாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறைந்தது ஏக்கருக்கு ₹30,000 வழங்க அரசு தவறினால் போராட்டம் நடத்துவேன் என்று அன்புமணி எச்சரித்துள்ளார்.

News September 19, 2025

சூப்பர் 4 சுற்றில் இந்தியா யாருடன் மோதுகிறது?

image

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா விளையாடும் போட்டிகளின் விவரம் வெளியாகியுள்ளது. குரூப் A-ல் முதலிடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா, வரும் 21-ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அதன் பிறகு 24-ம் தேதி வங்கதேசத்துடனும், 26-ம் தேதி இலங்கையுடனும் இந்தியா மோதுகிறது. சூப்பர் 4 சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 28-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

error: Content is protected !!