News September 19, 2025

கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு!

image

திண்டுக்கல்: நிலக்கோட்டையில் இன்று(செப்.19) நடைபெற்று வரும் அரசு நலத்திட்ட உதவிகளை நேரில் சென்று ஆய்வு செய்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு திடீரென ஆய்வு செய்தார். அங்கு பராமரிக்கப்படும் கோப்புகள் குறித்தும், பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்தார்.

Similar News

News September 19, 2025

திண்டுக்கல்: ஆன்லைன் ஷாப்பிங் மோசடி..உஷார்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். விற்பனை அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் மட்டும் பொருட்களை வாங்கவும்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News September 19, 2025

திண்டுக்கல்: ரயில் நிலையத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்!

image

திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு இன்று வந்த கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில், ரயில் என்ஜினை அடுத்த முன்பதிவு இல்லா பெட்டியில் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தபோது, அதில் 6 கிலோ கஞ்சா இருந்ததை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிகின்றனர்.

News September 19, 2025

திண்டுக்கல் மாவட்ட தாசில்தார் எண்கள்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் கட்டாயம் தெரிய வேண்டிய தாசில்தார் எண்கள்:

1)திண்டுக்கல்(மேற்கு): 9445000579
2)திண்டுக்கல்(கிழக்கு): 9384094522
3)நிலக்கோட்டை:9445000581
4)நத்தம்:9445000580
5)பழனி:9445000582
6)வேடசந்தூர்:9445000584
7)ஒட்டன்சத்திரம்:9445000583
8)கொடைக்கானல்:9445000585
இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!