News September 19, 2025
திமுக கூட்டணியில் உருவான சலசலப்பு!

2026 தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்டு வாங்குவதோடு, ஆட்சியிலும் பங்கெடுப்போம் என KS அழகிரி கூறிய கருத்து DMK கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தனித்து நின்றால் வெற்றி பெறாது என எதிரணியினர் கடுமையாக சாடி வருகின்றனர். முன்னதாக விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூடுதல் தொகுதிகள் கேட்டு திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனாலும், அறிவாலயம் அமைதி காத்து வருகிறது. உங்கள் கருத்து?
Similar News
News September 19, 2025
உழவர்களுக்கு துரோகம் இழைக்கும் திமுக: அன்புமணி

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்காமல் திமுக அரசு துரோகம் செய்வதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 9 மாதங்களாகியும் இழப்பீடு வழங்கப்படவில்லை எனவும் ஏக்கருக்கு அறிவித்த ₹6,800 இழப்பீடு தொகை போதாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறைந்தது ஏக்கருக்கு ₹30,000 வழங்க அரசு தவறினால் போராட்டம் நடத்துவேன் என்று அன்புமணி எச்சரித்துள்ளார்.
News September 19, 2025
சூப்பர் 4 சுற்றில் இந்தியா யாருடன் மோதுகிறது?

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா விளையாடும் போட்டிகளின் விவரம் வெளியாகியுள்ளது. குரூப் A-ல் முதலிடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா, வரும் 21-ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அதன் பிறகு 24-ம் தேதி வங்கதேசத்துடனும், 26-ம் தேதி இலங்கையுடனும் இந்தியா மோதுகிறது. சூப்பர் 4 சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 28-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.
News September 19, 2025
காந்தாரா ரசிகர்களுக்கு 22-ம் தேதி காத்திருக்கும் டிரீட்

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழிலும் கொண்டாடப்பட்ட இப்படத்தின் 2-ம் பாகமான ‘காந்தாரா சாப்டர் -1’ பிரமாண்டமாக உருவாகி வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் டிரெய்லர் செப்டம்பர் 22-ம் தேதி 12.45 PM வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 1000 ஆண்டுகளுக்கு முன் நடத்த கதையாக ‘காந்தாரா சாப்டர் -1’ உருவாகியுள்ளது.