News September 19, 2025
வேலூர் மக்களே இதை டவுன்லோட் பண்ணாதீங்க!

பொதுமக்களின் செல்போன் எண்ணிற்கு போக்குவரத்து அபராத செலான், வங்கி பணப்பரிவர்த்தனை, செல்போன் நிறுவனங்களின் பெயரில் வரும் குறுஞ்செய்தி பின்னால் ஏ.பி.கே. பைல் இருந்தால் அந்த இணைப்பை திறக்க கூடாது. இதனால் செல்போன் ஹேக் செய்யப்பட்டு பணமோசடி நடைபெறும். ஏ.பி.கே.பைல் இணைப்பை திறந்துவிட்டால் உடனடியாக வேலூர் சைபர் கிரைம் எண்ணிற்கு (1930) புகார் அளிக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்து உள்ளனர.
Similar News
News September 19, 2025
வேலூர் மாவட்டத்திற்கு முதல்வர் சூப்பர் அறிவிப்பு

சென்னை கிண்டியில் சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 19) திறந்து வைத்தார். அப்போது வேலூர் மாவட்டம் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலு நாச்சியார் பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வேலூர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
News September 19, 2025
வேலூர் மக்களே கனமழை எச்சரிக்கை!

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூரில் மாவட்டத்தில் இன்று (செப்.,19) கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை குறித்த புகார்களுக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்! கொஞ்சம் அலெர்ட்டாக இருங்க மக்களே
News September 19, 2025
வேலூர்: 670 போதை மாத்திரைகள் பறிமுதல்

காட்பாடி ரயில்வே ஸ்டேஷனில் நேற்று, காட்பாடி போலீசாருக்கு ரகசிய தகவலின் பேரில் காட்பாடி ரயில்வே நிலைய பார்க்கிங்கில் சந்தேகப்பட்ட வகையில் நின்றிருந்த 18பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்களிடம் இருந்து 670 போதை மாத்திரைகள் சட்ட விரோதமாக வாங்கி வந்து மற்றவர்கள் விற்பனை செய்வது உறுதியானது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி 16 பேரை கைது சிறையில் அடைத்தனர்.