News April 12, 2024

நெல்லை: மழைக்கு வாய்ப்பு

image

நெல்லை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மாலை 7 மணி வரை) லேசானது முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிக்கு 30 – 40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 10, 2025

நெல்லை: ஒரே நாளில் 4 பேர் மீது குண்டாஸ்

image

ராமையன்பட்டியை சேர்ந்த சுரேஷ், நந்தகுமார், கதிரவன், சுடலை மணி, ஆகியோர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக மானூர் போலீசார் கைது செய்தனர். இவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தனர். நெல்லை எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில் சுரேஷ் நந்தகுமார் கதிரவன் சுடலைமணியை குண்டர் சட்டத்தில் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News November 10, 2025

கொடுமுடியார் அணையில் நாளை தண்ணீர் திறப்பு

image

கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு நாளை காலை 9:30 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு தண்ணீர் திறந்து வைக்க உள்ளார் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா .சுகுமார் தலைமை தாங்குகிறார். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் விவசாயிகள் முன்னிலை வகிப்பார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 9, 2025

நெல்லை: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (நவ.9) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

error: Content is protected !!