News September 19, 2025
நாமக்கல் மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

நாமக்கல் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News September 19, 2025
நாமக்கல்: எடப்பாடி பழனிசாமி வருகை திடீர் ரத்து!

நாமக்கல் மாவட்டத்திற்கு நாளை மற்றும் நாளை மறுநாள் பயணம் மேற்கொள்ள இருந்த அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம், தொடர் மழை காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணம், அடுத்த மாதம் 4ஆம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
News September 19, 2025
நாமக்கல்: திருட்டு சம்பவங்கள்.. இதை செய்யுங்க!

நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காவல் துறை கூடுதல் இயக்குநா் (சட்டம் – ஒழுங்கு) டேவிட்சன் தேவாசீா்வாதம், “போக்சோ வழக்குகள் வெகுவாக குறைந்துள்ளன. நகை திருட்டுச் சம்பவங்களில் சில இடங்களில் உறவினா்களே குற்றம் செய்பவராக உள்ளனா். திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க பொதுமக்கள் தங்களுடைய வீடுகளைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது அவசியம்” என தெரிவித்தார்.
News September 19, 2025
கறிக்கோழி கிலோவுக்கு ரூ.12 குறைவு

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.123-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.12 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.111 ஆக குறைந்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 525 காசுகளாகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.107 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை