News September 19, 2025

சேலம்: லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர் சஸ்பெண்ட்!

image

ஆத்தூர், துலுக்கானூர் கிராமத்தை சேர்ந்த குமரேசன் புதிதாக வாங்கிய வீட்டுமனையை தனிப்பட்டாவாக மாற்ற, ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலக சர்வேயர் ஜீவிதாவை அணுகியுள்ளார். அப்போது, ஜீவிதா ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து குமரேசன் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். பணத்தை கொடுக்கும்போது கையும் களவுமாக பிடிபட்ட ஜீவிதா கைது செய்யப்பட்டு, தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News September 19, 2025

சேலம் வழியாக தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

image

நவராத்திரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக சென்னை சென்ட்ரல்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.22, 29,அக்.06,13,20 தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கும், மறுமார்க்கத்தில், செப்.23,30,செப்.07,14,21 தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

News September 19, 2025

சேலம் மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

image

சேலம் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 19, 2025

சேலம்: இனி அலைச்சல் வேண்டாம்.. ரொம்ப ஈசி!

image

சேலம் மக்களே, ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்காக <>‘RailOne’ <<>>எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இனி தினசரி ரயில் பயணிகள் கவுண்டரில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!