News September 19, 2025
குமரி: நாளை ரயில் சேவையில் முக்கிய மாற்றம்

கோட்டயம்- சிங்கவனம் இடையே பாலம் பராமரிப்பு பணியையொட்டி நாளை (செப் 19) ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ரெயில் எண் 12624 திருவனந்தபுரம்-சென்னை சென்டிரல் அதிவேக ரெயில் ஆலப்புழை வழியாக இயக்கம்; ரெயில் எண் 22503, ரெயில் எண் 16343, ரெயில் எண் 16347 ஆலப்புழை வழியாக இயக்கம்; ரெயில் எண் 16366) நாகர்கோவில் – கோட்டயம் ரெயில் சங்கனாச்சேரி வரை இயக்கக்கபடுகிறது.
Similar News
News September 19, 2025
குமரி: முகாமை தொடங்கி வைத்த எம்.பி

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (செப். 19) நடைபெற்றது.
முகாமை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துக்கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
News September 19, 2025
குமரியில் 17 பெற்றோர்கள் மீது வழக்கு

குமரி: போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீதும், விபத்துகளை தடுக்கும் வகையிலும் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் 6 சிறார்கள் ஓட்டி வந்த பைக்குகளை பறிமுதல் செய்தனர். கடந்த 5 நாட்களில் மட்டும் 17 சிறுவர்களின் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, மொத்தம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.
News September 19, 2025
குமரி: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <