News September 19, 2025
தர்மபுரியை நெருங்கும் ஆபத்து – உஷார் மக்களே!

தர்மபுரி, கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக கே.ஆர்.பி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் இன்று அதிகளவிலான உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. இதனையடுத்து, தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தர்மபுரி தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!
Similar News
News September 19, 2025
JUST IN: தருமபுரி பள்ளி மாணவிகள் சாலை மறியல்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள இண்டூரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் பள்ளி மாணவிகளிடம் தவறாக முறையில் நடந்து கொள்வதாக கூறி பள்ளி மாணவிகள் இன்று சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து போலீசார் அவர்களை சமாதான படுத்தும் முயற்சி ஈடுபட்டுள்ளனர்.
News September 19, 2025
தர்மபுரி: 12th போதும் ரூ.81,000 சம்பளம்

எல்லைப் பாதுகாப்புப் படையில் ரேடியோ ஆபரேட்டர் (RO) & ரேடியோ மெக்கானிக் (RM) பிரிவில் கான்ஸ்டபிள் பணிக்கு 1,121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, 12th படித்தவர்கள் படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். செப்.23 வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News September 19, 2025
தர்மபுரி: கொலை வழக்கில் ஆயுள் தணடனை

தர்மபுரி கொலை வழக்கு தொடர்பாக நிர்மலா, கள்ளக்காதலன் அபினேஷ் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இன்று நீதிபதி மோனிகா தீர்ப்பு அளித்தார், அதில் நிர்மலாவுக்கும், அபினேஷ்க்கும் ஆயுள்தண்டனையும், தலா ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர் விடுவிக்கப்பட்டனர்.