News September 19, 2025
USA-வில் இந்திய மாணவர் என்கவுன்டர்.. நடந்தது என்ன?

USA-வில் PG படித்து வந்த தெலங்கானாவை சேர்ந்த முகமது நிஜாமுதீன்(30) அந்நாட்டு காவல்துறையால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். ஹாஸ்டலில் உடன் இருந்தவரை கத்தியால் குத்தியதற்காக அவரை சுட்டு கொன்றதாக போலீசார் கூறியுள்ளனர். செப்.3-ம் நடந்த இந்த சம்பவம் 2 வாரங்களுக்கு பிறகே குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இனவெறி பிரச்னையே காரணம் என மாணவனின் குடும்பத்தார் குற்றம்சாட்டியுள்ளனர்.
Similar News
News September 19, 2025
BREAKING: ₹18,000 வரை விலை குறைந்தது!

GST சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் கார், பைக்குகளின் விலைகளை குறைத்து ஒவ்வொரு நிறுவனங்களாக அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது சுசுகி நிறுவனமும் இணைந்துள்ளது. அதன்படி Access (₹8,523), Avenis (₹7,823) Burgman Street (₹8,373), GIXXER (₹11,520), GIXXER 250 (₹16,525), V-Strom SX (₹17,982) விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு வரும் 22-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
News September 19, 2025
மீண்டும் உயர தொடங்கிய அதானி குழும பங்குகள்

வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை தொடங்கி, செயற்கையான முறையில் அதானி குழுமம் பங்குகளில் முதலீடு செய்வதாக ஹிண்டன்பெர்க் நிறுவனம் குற்றம்சாட்டி இருந்தது. ஆனால் அது தவறான குற்றச்சாட்டு என செபி நேற்று விரிவான அறிக்கையை வெளியிட்டது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் இன்று லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. அதானி குழுமத்தின் பங்குகள் 10% வரை உயர்வுடன் வா்த்தகத்தை தொடங்கியுள்ளன.
News September 19, 2025
ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த வீரர்கள் யார் யார்?

2007-ம் ஆண்டு இதேநாளில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை பறக்கவிட்டு யுவராஜ் சிங் கிரிக்கெட் ரசிகர்களை மிரள வைத்தார். ஆனால் யுவராஜ் சிங்கை தவிர்த்து சர்வதேச கிரிக்கெட் மற்றும் IPL-ல் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்தது யார் யார் என்று தெரியுமா? அந்த பட்டியலை மேலே புகைப்படங்களாக கொடுத்துள்ளோம். ஒவ்வொன்றாக Swipe செய்து பாருங்கள்.