News September 19, 2025
FLASH: சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள்!

நேற்று ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று(செப்.19) சரிவுடன் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சென்செக்ஸ் 128 புள்ளிகள் சரிந்து 82,892 புள்ளிகளிலும், நிஃப்டி 25 புள்ளிகள் சரிந்து 25,393 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Titan, TCS, ICICI Bank, Hindalco, TATA Cons. Prod நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக சரிந்துள்ளன.
Similar News
News September 19, 2025
ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த வீரர்கள் யார் யார்?

2007-ம் ஆண்டு இதேநாளில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை பறக்கவிட்டு யுவராஜ் சிங் கிரிக்கெட் ரசிகர்களை மிரள வைத்தார். ஆனால் யுவராஜ் சிங்கை தவிர்த்து சர்வதேச கிரிக்கெட் மற்றும் IPL-ல் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்தது யார் யார் என்று தெரியுமா? அந்த பட்டியலை மேலே புகைப்படங்களாக கொடுத்துள்ளோம். ஒவ்வொன்றாக Swipe செய்து பாருங்கள்.
News September 19, 2025
வெறும் 40 பைசாவில் ₹10 லட்சம் இன்சூரன்ஸ்!

ரயிலில் பயணிக்கும்போது விபத்து ஏற்பட்டால் மருத்துவம் பார்க்க, ₹10 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போதே இந்த இன்சூரன்சுக்கான ஆப்ஷனை க்ளிக் செய்து, 40 பைசாவை கட்டினால் போதும். ரயில் விபத்தில் ஒருவர் இறந்தாலோ, உடல் முழுவதுமாக செயலிழந்தாலோ ₹10 லட்சம் வரை கிடைக்கும். பகுதியளவு செயலிழந்தால் ₹7.5 லட்சமும், காயம் ஏற்பட்டால் ₹2 லட்சமும் வழங்கப்படுகிறது. SHARE.
News September 19, 2025
₹36 கோடி வருமான வரி: ஜெ.தீபா வழக்கு தள்ளுபடி

ExCM ஜெயலலிதா செலுத்த வேண்டிய ₹36 கோடி வருமான வரி பாக்கியை செலுத்தக் கோரி, ஜெ.தீபாவுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் விசாரணையில், வரித் தொகையை ₹13 கோடியாக குறைத்துவிட்டதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.