News September 19, 2025

மயிலாடுதுறை: கடைசி தேதியை அறிவித்த கலெக்டர்

image

தீபாவளி பண்டிகை வருகிற 20.10. 2025 அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் நிபந்தனைகளின்படி வருகிற 10.10.2025குள் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பொது மக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சேபனையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 19, 2025

மயிலாடுதுறை: 10th போதும்; ஏர்போர்ட்டில் வேலை!

image

இந்திரா காந்தி சர்வதேச விமானப் சேவைகள் (IGI Aviation Services) நிறுவனத்தில் காலியாக உள்ள ‘1446’ Airport Ground Staff மற்றும் Loaders பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 & 12-ம் வகுப்பு முடித்த, 18-30 வயதுக்குட்பட்ட நபர்கள்<> இங்கே க்ளிக்<<>> செய்து, வரும் செப்.21-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். SHARE NOW!

News September 19, 2025

மயிலாடுதுறை 950 வாக்குச்சாவடி மையங்கள் -ஆட்சியர்

image

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியனருக்கான கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை சீர்காழி பூம்புகார் ஆகிய 3 தொகுதிகளில் 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பிரித்து 862 இருந்த வாக்குச்சாவடிகள் 950 வாக்குச்சாவடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 19, 2025

மயிலாடுதுறையில் பெய்த மழையின் அளவு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணல்மேடு, சீர்காழி, தரங்கம்பாடி, கொள்ளிடம், உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 75 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தரங்கம்பாடியில் 67.60 மிமீ, செம்பனார்கோவிலில் 61.மிமீ சீர்காழியில் 42.மிமீ மழை பொழிந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!