News September 19, 2025
கடலூர்: இலவச ஓட்டுநர் பயிற்சி

கடலூர் இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் இலவச இலகுரக வாகன (Light Motor Vehicle – LMV) ஓட்டுநர் பயிற்சி 30 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் இன்று (செப்.19) முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான நேர்காணல் செப்.25-ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04142-796183 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Similar News
News November 8, 2025
கடலூர்: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் மானியம்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18233170>>பாகம்<<>>-2)
News November 8, 2025
கடலூர்: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் (2/2)

1.கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
2.ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
3.ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
4.ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
4.விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க..
News November 8, 2025
தமிழக அரசால் நூலகங்கள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது

3 நகரங்களில் நூலகங்கள் அமைக்க டெண்டர்.
சேலம், நெல்லை மற்றும் கடலூரில் மாபெரும் நூலகங்கள் அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு.
சேலத்தில் பாரதிதாசன் பெயரில் ரூ.73 கோடியிலும், நெல்லையில் காயிதே மில்லத் பெயரில் ரூ.69 கோடியிலும், கடலூரில் அஞ்சலை அம்மாள் பெயரில் ரூ.80 கோடியிலும் நவீன வசதிகளுடன் நூலகங்கள் அமைக்கப்பட உள்ளன. டெண்டர் முடிவுற்ற பிறகு தமிழக அரசால் முழு விபரமும் தெரிவிக்கப்படும்


