News September 19, 2025
திருச்சி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திருச்சி மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News September 19, 2025
திருச்சியில் மருத்துவருடன் ஒரு நாள் நிகழ்ச்சி

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் வரும் 21-ம் தேதி மாலை 4 முதல் 5 மணி வரை, ‘மருத்துவருடன் ஒரு நாள்’ நிகழ்ச்சியில், ‘குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி’ என்ற தலைப்பில், ஓய்வுபெற்ற மாவட்ட அரசு சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் சிறப்புரையாற்றி, கலந்துரையாடுகிறார். இதில், பொதுமக்கள், வாசகர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்ள மாவட்ட நுாலக அலுவலர் சரவணக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
News September 19, 2025
திருச்சி: IIM-இல் வேலை வாய்ப்பு

திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தில் ப்ரோக்ராம் அசிஸ்டன்ட் (1), செகரட்டரியல் அசிஸ்டன்ட்(1), எக்ஸிக்யூட்டிவ் அசிஸ்டன்ட் (1), மெயின்டனன்ஸ் டெக்னீசியன் (1), இன்ஜினியரிங் டிரெய்னீ (1) உட்பட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் <
News September 19, 2025
திருச்சி மைய நூலகத்தில் யோகா பயிற்சி

திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில், வரும் 20-ம் தேதி மாலை 5 மணிக்கு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமான யோகா பயிற்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், மனவளக்கலை மன்ற யோகா ஆசிரியர் முருகேஸ்வரி பயிற்சி அளிக்க உள்ளார். நுாலகத்தில், ஏற்கனவே வியாழக்கிழமை தோறும் நடந்து வந்த இப்பயிற்சி இனி சனிக்கிழமை தோறும் மாலை 5 மணிக்கு நடைபெறும் என மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.