News September 19, 2025

ஈரோடு: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

image

ஈரோடு மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் ‘<>ரயில் ஒன்<<>>’ எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், இனி தினசரி ரயில் பயணிகள் கவுண்டரில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. அப்புறம்.., தீபாவளிக்கு டிக்கெட் போட்டாச்சா..?

Similar News

News September 19, 2025

ஈரோட்டில் அரசு பஸ் மோதி விபத்து!

image

கோவையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. விண்ணப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது எதிர்திசையில் கோவை நோக்கி அதி வேகமாக சென்ற பூ வாகனம் அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்ஸில் இருந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 19, 2025

ஈரோடு: மனைவியுடன் சண்டயால் தற்கொலை!

image

ஈரோடு: என்.ஜி.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளி விக்னேஷ் (30). மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் கடந்த 16ஆம் தேதி மது போதையில் தனது மனைவி கீதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் விரக்தியடைந்த விக்னேஷ், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 19, 2025

ஈரோடு – செங்கோட்டை ரயில் சேவை பகுதி ரத்து

image

ஈரோடு – கரூா் ரயில் பாதையில் பொறியியல் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக, ஈரோடு – செங்கோட்டை (16845 / 16846) ரயில் சேவை வருகிற 22, 25, 28, 30, அக். 3, 6 ஆகிய தேதிகளில் பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது. ஈரோடு – கரூா் சேவை ரத்து செய்யப்பட்டு, கரூா் – திண்டுக்கல்- கரூா் இடையே மட்டும் இந்த ரயில்கள் இயக்கப்படும் என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!