News September 19, 2025

ADMK-லிருந்து பலர் DMK-வுக்கு வரவுள்ளனர்: மருது அழகுராஜ்

image

அபகரிப்பு அரசியலை விட்டு, அரவணைப்பு அரசியலை நோக்கி நகர்ந்துள்ளதாக திமுகவில் இணைந்த <<17753920>>மருது அழகுராஜ்<<>> கூறியுள்ளார். 20 ஆண்டு காலம் அதிமுகவில் பயணித்து குறிப்பாக ஜெயலலிதாவின் உரை ஆசிரியராக இருந்த தனக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை என தெரிவித்தார். மேலும், இபிஎஸ் அதிமுகவை அபகரித்தார், அவரை பாஜக அபகரித்துவிட்டது என கூறிய அவர், மேலும் பலர் அதிமுகவை விட்டு விலகி திமுகவில் இணைய உள்ளனர் என்றார்.

Similar News

News March 8, 2026

எல்லை பாதுகாப்பு பணிகளில் ரோபோ

image

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் எல்லை காவலுக்கான ரோபோக்கள் தயாரிக்கப்படும் என்று அம்மாநில CM தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவித்துள்ளார். -40°C வரையிலான கடும் குளிரிலும் இந்திய எல்லைகளை காவல் காக்கும் ரோபோக்கள் தயாரிக்கப்படும் என்றும், சீனாவுக்கு இணையாக இந்தியாவிலும் ரோபோக்களை உருவாக்குவோம் என்றும் கூறினார். மேலும், அடுத்த ஆண்டில் முதல் ரோபோ முன்மாதிரி உருவாக்கப்படும் என்றார்.

News March 8, 2026

நிதிஷ்குமாரின் பதவி பறிக்கப்பட்டதா? வானதி

image

நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட கதி EPS-க்கு ஏற்படும் என ஸ்டாலின் வைத்த விமர்சனத்துக்கு வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார். ராஜ்யசபாவுக்கு செல்ல வேண்டும் என்பது நிதிஷின் சொந்த முடிவு என்றும், பிஹாரில் பாஜக அதிக MLA-க்கள் பெற்றும் 2 முறை அவரை முதல்வராக்கினோம் எனவும் தெரிவித்துள்ளார். பாஜக வந்துவிடும் என மக்களை ஸ்டாலின் பயமுறுத்த பார்க்கிறார், ஆனால் ஏற்கனெவே இங்கு பாஜக வந்துவிட்டது என கூறியுள்ளார்.

News March 8, 2026

ராசி பலன்கள் (08.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!