News September 19, 2025

கள்ளக்குறிச்சி: தெரு நாய்களால் விபத்துகள்

image

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட 21 வார்டு பகுதிகளிலும், தெரு நாய்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தெரு நாய்களால் கள்ளக்குறிச்சி நகர் பகுதியில் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, தெரு நாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News September 19, 2025

கள்ளக்குறிச்சி: தூய்மை இயக்கம் 2.0 – ஆட்சியர் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இன்று (செப். 19) தூய்மை இயக்கம் 2.0 தொடங்கப்பட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட உள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். அனைத்து கல்வி நிறுவன உரிமையாளர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் இது குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

News September 19, 2025

கள்ளக்குறிச்சி: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News September 19, 2025

கள்ளக்குறிச்சி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!