News September 19, 2025
ஆந்திராவிலிருந்து தேனிக்கு டூவீலரில் 14 கிலோ கஞ்சா கடத்தல்

தேவாரத்திலிருந்து ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்துக்கு டூவீலரில் சென்று ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள 14 கிலோ கஞ்சாவை வாங்கி கொண்டு கடத்தி வந்த அப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் 32, கோம்பை ஈஸ்வரனை 40, போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தேனியில் இருந்து விசாகபட்டினத்திற்கு டூவீலரிலேயே 1200 கி.மீ., துாரம் குறுக்கு வழித்தடங்களில் சென்று சில்லரை விற்பனையில் கிடைக்கும் கஞ்சாவை வாங்கி கடத்தி வந்தது தெரிந்தது.
Similar News
News September 19, 2025
தேனி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

தேனி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 19, 2025
தேனி ஆவினில் தீபாவளிக்காக 6 டன் மைசூர்பாக் தயாரிப்பு

தேனி ஆவின் மூலம் பால் கூட்டுறவு சங்கங்களில் இருந்து தினமும் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. சில மாதங்களாக தேனி தொழிற்பேட்டையில் உள்ள ஆவின் குளிரூட்டும் மையத்தில் பாதாம் பால் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகை வருவதை ஒட்டி 1.5 டன் பாதாம்பால் பவுடரும், சுமார் 6 டன் மைசூர்பாக் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆவின் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
News September 19, 2025
தேனியில் ரூ.12.25 லட்சம் வரை மானியம் பெறலாம்

தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மானியத்தில் மாம்பழ கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க விண்ணப்பிக்கலாம். அதிகபட்சமாக ரூ.12.25 லட்சம் மானியமாக வழங்க உள்ளதாகவும், இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு விவசாயக் தங்கள் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.