News April 12, 2024
திங்கட்கிழமை ₹1000 வரவு வைக்கப்படும்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான ₹1000 திங்கட்கிழமை (ஏப்ரல் 15) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. தமிழகத்தில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். தற்போது தேர்தல் நடைமுறைகள் அமலில் இருப்பதால் பணம் வருமா என்ற கேள்வி இருந்தது. ஆனால், பணம் கொடுக்க எந்த தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கும் நிலையில் விரைவில் பணம் வரவு வைக்கப்படவுள்ளது.
Similar News
News July 6, 2025
தமிழறிஞர் வா.மு.சேதுராமன் மறைவு: தலைவர்கள் அஞ்சலி

<<16955086>>தமிழறிஞர் வா.மு.சேதுராமன்<<>> உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதுவரை, CM ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், வைகோ, வேல்முருகன், மல்லை சத்யா உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். நாளை அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. சேதுராமனை கௌரவிக்கும் விதமாக அரசு மரியாதை செலுத்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு சேதுராமன் குடும்பத்தினர் இன்று நன்றி தெரிவித்துள்ளனர்.
News July 6, 2025
இந்த தப்பை செய்தால் PF பென்சன் கிடைக்காது

உங்களுடைய PF கணக்கில் இந்த விதியை மீறினால் பென்சன் பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். EPFO வகுத்துள்ள விதிகளின்படி, எந்தவொரு ஊழியரும் தனது PF கணக்கில் 10 ஆண்டுகளுக்கு பணத்தை டெபாசிட் செய்தால், அவர் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர் ஆகிறார். அந்த ஊழியர் 50 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கணக்கின் முழுத் தொகையையும் எடுத்தால் உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது.
News July 6, 2025
தவெக உறுப்பினர் சேர்க்கை: பயிற்சி பட்டறை அறிவிப்பு

2 கோடி உறுப்பினர் சேர்க்கையை இலக்காகக் கொண்டு தவெக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இதற்கான பயிற்சிப் பட்டறை வருகிற 8-ம் தேதி பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். இதில் மாவட்டச் செயலாளர்கள், அந்தந்த மாவட்டத்தின் 2 IT Wing நிர்வாகிகளை அழைத்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்சியின் உள்கட்டமைப்பில் தவெக கவனம் செலுத்தி வருகிறது.