News September 19, 2025
தேனியில் இங்கெல்லாம் நாளை மின்தடை

தேனியில் மின் பராமரிப்பு பணி காரணமாக தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், தேனி புதிய பேருந்து நிலைய வளாகம், சிவாஜி நகர், பாரஸ்ட் ரோடு, சிட்கோ தொழிற்பேட்டை வளாகம், வடபுதுப்பட்டி, அரப்படித்தேவன்பட்டி, ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகைபுதூர், ஜம்புலிபுத்தூர், மருகால்பட்டி, வைகை அணை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
Similar News
News September 19, 2025
தேனி ஆவினில் தீபாவளிக்காக 6 டன் மைசூர்பாக் தயாரிப்பு

தேனி ஆவின் மூலம் பால் கூட்டுறவு சங்கங்களில் இருந்து தினமும் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. சில மாதங்களாக தேனி தொழிற்பேட்டையில் உள்ள ஆவின் குளிரூட்டும் மையத்தில் பாதாம் பால் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகை வருவதை ஒட்டி 1.5 டன் பாதாம்பால் பவுடரும், சுமார் 6 டன் மைசூர்பாக் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆவின் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
News September 19, 2025
தேனியில் ரூ.12.25 லட்சம் வரை மானியம் பெறலாம்

தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மானியத்தில் மாம்பழ கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க விண்ணப்பிக்கலாம். அதிகபட்சமாக ரூ.12.25 லட்சம் மானியமாக வழங்க உள்ளதாகவும், இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு விவசாயக் தங்கள் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
News September 19, 2025
தேனி: EXAM இல்லாத அரசு துறை வேலை! APPLY

மத்திய அரசின் கீழ் செயல்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 160 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. B.E படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது 4 வருட ஒப்பந்த வேலையாகும். மாத சம்பளம் – ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு தேர்வு கிடையாது. அக். 22க்குள் <