News September 19, 2025
விஜய் வருகை: திருவாரூரில் மின்தடை அறிவிப்பு

தவெக தலைவர் விஜய் வரும் 20-ம் தேதி திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கொடிக்கால்பாளையம், மேட்டுப்பாளையம், மாங்குடி, திருக்கண்ணமங்கை, பவித்திரமாணிக்கம், பெரும்பண்ணையூர், கொரடாச்சேரி, கேக்கரை, அடியக்கமங்கலம், ஓடாசேரி, ஆந்தகுடி, கண்கொடுத்தவனிதம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW
Similar News
News March 15, 2026
திருவாரூர்: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News March 15, 2026
திருவாரூர்: பணி ஆணைகளை வழங்கிய அமைச்சர்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் திருமக்கோட்டை பகுதி உட்பட்ட திருமேனி ஏரி நரிக்குறவர் காலனி மக்களுக்கு, 54 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், இப்பொழுது பாமணி நரிக்குறவர் காலனி மக்களுக்கு, 39 வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை தொழில்துறை டி ஆர்.பி ராஜா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News March 15, 2026
திருவாரூர்: போலீசார் சோதனையில் 150 மது பாட்டில்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்டம், பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பேரளம் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்ட போது இருசக்கர வாகனத்தில் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி மது பாட்டில்களை (180 லிட்டர்) கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டு, அவர் கடத்தி வந்த 150 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்


