News September 19, 2025

ஈரோட்டில் 5 பேர் கைது: போலீஸ் அதிரடி

image

ஈரோடு: பெருந்துறை அடுத்துள்ள மூங்கில் பாளையத்தில் பரமேஸ்வரன் என்பவரது வீட்டில் பணம் வைத்து சீட்டாட்டம் நடைபெறுவதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது 5 பேர் பண வைத்து சூதாடியது தெரிந்தது. இதில் பரமேஸ்வரன், பாஸ்கரன் ,சீனாபுரம் கிருஷ்ணன், நாகராஜ் கொட்டாம்புலியூர் அசோக், பெருமாநல்லூர் சின்னச்சாமி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News September 19, 2025

ஈரோடு – செங்கோட்டை ரயில் சேவை பகுதி ரத்து

image

ஈரோடு – கரூா் ரயில் பாதையில் பொறியியல் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக, ஈரோடு – செங்கோட்டை (16845 / 16846) ரயில் சேவை வருகிற 22, 25, 28, 30, அக். 3, 6 ஆகிய தேதிகளில் பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது. ஈரோடு – கரூா் சேவை ரத்து செய்யப்பட்டு, கரூா் – திண்டுக்கல்- கரூா் இடையே மட்டும் இந்த ரயில்கள் இயக்கப்படும் என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News September 19, 2025

ஈரோடு: டிகிரி முடித்தால் அரசு வேலை!

image

ஈரோடு மக்களே.., தமிழ்நாடு குழந்தைகள் நலத்துறையில் காலியாக உள்ள 12 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.45,000 வரை சம்பளம் வழங்கப்படும். வருகிற அக்.3ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே அமைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 19, 2025

ஈரோடு பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

image

ஈரோடு துணை மின் நிலையத்தில் நாளை(செப்.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஈரோடு வீரப்பன்சத்திரம், ஆசிரியர் காலனி, பெரியார் நகர், ஈரோடு பேருந்து நிலையம், முனிசிபால் காலனி, காந்திஜி ரோடு, பெருந்துறை ரோடு, மேட்டூர் ரோடு, சம்பத் நகர், பெரிய வலசு, கருங்கல்பாளையம், சத்தி ரோடு, நேதாஜி ரோடு ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!