News September 19, 2025
டெபாசிட் கட்டு.. பொதுக்கூட்டம் நடத்து: கோர்ட்

பொதுக்கூட்டங்கள் நடத்த விரும்பும் அரசியல் கட்சிகளிடம் செக்யூரிட்டி டெபாசிட் வசூலிக்க சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. எந்த ஒரு பெரிய பொதுக்கூட்டங்களின் போதும், பொது சொத்துக்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் நடப்பது உண்டு எனவும், அந்த இழப்பை ஈடுகட்ட பாதுகாப்பு தொகை வசூலிப்பது அவசியம் என்றும் கூறியுள்ளது. மேலும், இதற்கான விதிமுறைகளை போலீஸ் வகுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News April 4, 2026
TN தேர்தல்.. இன்று வியூகம் வகுக்கும் மோடி

சென்னையில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் இன்று காலை நடைபெறவுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் வியூகம், பரப்புரை, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இதில், நயினார், வானதி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், தமிழக பாஜக வேட்பாளர்கள் மோடியை சந்தித்து வாழ்த்து பெறுவார்கள். <<-se>>#TNElection2026<<>>
News April 4, 2026
இரு பிரிவினரிடையே மோதலை உண்டாக்க திமுக முயற்சி

தான் MLA-வாகவுள்ள பண்ருட்டி தொகுதியில் விசிகவுக்கு வாய்ப்பளிக்க திமுக முயற்சித்தது என வேல்முருகன் கூறியுள்ளார். இதன் மூலம் அங்கு வாழும் இரு சமூக மக்களிடையே மோதலை உண்டாக்க திமுக திட்டமிட்டது என அவர் வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார். நான் இருக்கும் வரை தமிழகத்தில் சாதிய மோதல் நடக்க விடமாட்டேன் என்றும் கூறினார். செளமியா அன்புமணிக்கு எதிராக திமுக தன்னை போட்டியிட சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார்.
News April 4, 2026
கார் வாங்க நினைத்தோருக்கு காலையிலேயே மகிழ்ச்சி

ஹோண்டா நிறுவனம் தனது கார்களுக்கு ஏப்ரல் மாத சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹30,000 முதல் அதிகபட்சமாக ₹1 லட்சம் வரை சலுகைகள் உள்ளன. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இடப்பக்கம் ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.


