News September 19, 2025
கரூர்: 116 வயது மதிக்கத்தக்க முதியவர் உயிரிழப்பு

கரூர் மாவட்டம் தோகைமலை அருகேயுள்ள ஆதனூரைச் சேர்ந்த பொன்னுசாமி (வயது 116) தன்னுடைய வாழ்க்கையில் ஒருபோதும் மருத்துவமனைக்குச் செல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தவர். அவருக்கு 2 மகன்கள், 5 பெண் குழந்தைகள், 15 பேரக்குழந்தைகள் மற்றும் 18 கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர். வயது முதிர்வு காரணமாக அவர் இயற்கை மரணமடைந்த நிலையில், அவரது உடல் பூந்தேரில் எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
Similar News
News November 14, 2025
கரூர் மேற்கு பகுதியில் நாளை மின் தடை

கரூர் மின் அலுவலகத்திற்கு உட்பட்ட 11 K .V. சஞ்சய் நகர், வடிவேல் நகர், ஆண்டான் கோவில் மற்றும் மொச்ச கொட்டம் பாளையம், பவித்திரம், ஆகிய மின்பாதைகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் வேப்பம்பாளையம், கோவிந்தம் பாளையம், மொச்ச கொட்டாம்பாளையம், அருள் நகர், சுந்தர் நகர், ஆத்தூர் பிரிவு, செல்லராபாளையம், விசுவநாதபுரி, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
News November 14, 2025
கரூர்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 14, 2025
கரூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

கரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Production Assistant பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000-ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <


