News April 12, 2024
புதுச்சேரி பாஜக செயல் வீரர்கள் கூட்டம்

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநில செயல் வீரர்கள் கூட்டம் மாநில தலைவர் செல்வகணபதி தலைமையில் இன்று நடைபெற்றது. தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மேலும் புதுச்சேரி மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ன, வேட்பாளர் நமச்சிவாயம், அமைச்சர் சாய் ஜெய் சரவணகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News January 13, 2026
புதுச்சேரி: ஆயுளை நீடிக்கும் திருக்காமேஸ்வரர்

புதுச்சேரியில் ஸ்ரீ கோகிலாம்பாள் திருக்காமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது, இங்கு எழுந்தருளியுள்ள சுயம்பு மூர்த்தியை தரிசித்தால் தீராத நோய்கள், கடன் பிரச்சனை ஆகியவை முழுமையாக நீங்கி ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் திருக்கார்த்திகை, சிவராத்திரி போன்ற நாட்கள் மிகவும் விசேஷமானவை என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!
News January 13, 2026
புதுச்சேரி: அல்மான்ட் இருமல் மருந்திற்கு தடை

பீகார் மாநில ‘ட்ரிடஸ் ரெமிடீஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பான, ‘அல்மான்ட் கிட் சிரப்’ என்ற மருந்திற்குத் புதுச்சேரி அரசு தடை விதித்துள்ளது. மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வில், இந்த சிரப்பில் சிறுநீரகத்தை மிகக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய, எத்திலீன் கிளைக்கோல் என்ற நச்சுப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட, மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டதால், தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News January 13, 2026
புதுவை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…


