News September 19, 2025

போதையில் வாகனம் ஓட்டிய 154 பேரின் லைசென்ஸ் ரத்து!

image

சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி, சேலம், தருமபுரி மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் மதுப்போதையில் வாகனம் ஓட்டிய 154 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக 3 மாதத்திற்கு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. பர்மிட், தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என்று வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News September 19, 2025

சேலம்: தமிழ் தெரிந்தால் ரூ.71,000 சம்பளம்!

image

சேலம் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News September 19, 2025

சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

image

ரயில் சிக்னல் மேம்பாட்டு பணிகள் காரணமாக, நாளை மறுநாள் (செப்.20) மயிலாடுதுறை- சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் (16811) மல்லூர் வரையிலும், சேலம்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (16812) மல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும். இந்த ரயில்கள், மல்லூர்-சேலம் இடையே இயக்கப்படமாட்டாது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News September 18, 2025

சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (18.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

error: Content is protected !!