News September 18, 2025
ஆசிய கோப்பை: AFG முதலில் பேட்டிங்

ஆசிய கோப்பையில், இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்கிறது. பேட்டிங்கில் இலங்கையும், பந்துவீச்சில் ஆப்கானிஸ்தானும் வலுவாக காணப்படுவதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும். போட்டியில் ஆப். அணி வெற்றிபெறுவது அவசியம், தோற்கும் பட்சத்தில் குரூப் B-ல் இருந்து சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை, வங்கதேச அணிகள் முன்னேறிவிடும். குரூப் B-ல் இன்றுடன் லீக் போட்டிகள் முடிவடைகின்றன.
Similar News
News September 19, 2025
மெதுவாக வேலை செய்யும் அதிகாரிகளுக்கு அபராதம்

புதுச்சேரியில் கோப்புகளை தாமதப்படுத்தும் அரசு ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது. அரசாங்கத்திற்கு உயரதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என அம்மாநில CM ரங்கசாமி கூறி வந்த நிலையில், அபராதம் விதிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, காரணமின்றி கோப்புகளை தேக்கி வைத்திருக்கும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ₹250 அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டிலும் இதை கொண்டு வரலாமா?
News September 19, 2025
EPFO சேவைகள் இனி ஈஸி

பிஎப் (EPFO) இணையதளத்தில் சேவைகளை பெற லாக்-இன் செய்யும்போது, பாஸ்புக் விவரங்களை பார்க்க தனியே லாக்-இன் செய்ய வேண்டியிருந்தது. இனி அந்த சிரமம் இருக்காது. இனி உறுப்பினர் பக்கத்துக்கு லாக்-இன் செய்வதிலேயே பாஸ்புக் விவரங்களையும் பார்க்க முடியும். தனியே லாக்-இன் செய்யும் தேவை இருக்காது. மேலும், PF டிரான்ஸ்பர் சான்றிதழையும் பிடிஎப் வடிவில் இந்த தளத்தில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியும்.
News September 19, 2025
13 பந்துகளில் அரைசதம்.. அதிரடி காட்டிய வீரர்

சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் விளாசிய 3-வது வீரர் என்ற சாதனையை நமீபியா வீரர் ஜேன் ஃபிரைலிங்க் படைத்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது டி20-ல், வெறும் 13 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். 31 பந்துகளை எதிர்கொண்ட அவர் 6 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் விரட்டி 77 ரன்கள் எடுத்தார். நமீபியா 20 ஓவர்களில் 204 ரன்கள் குவித்த நிலையில், சேஸ் செய்த ஜிம்பாப்வே 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.