News September 18, 2025
WA: நீரஜ் ஏமாற்றம்… பதக்கம் வெல்லும் கனவு தகர்ந்தது

உலக தடகள சாம்பியன்ஷிப், ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஏமாற்றம் அளித்தார். இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 84.03மீ ஈட்டி எறிந்து 8வது இடம் பிடித்தார். ஒரு முறை கூட அவர் 85மீ தாண்டி ஈட்டி எறியவில்லை. கடந்த முறை தங்கம் வென்றிருந்த நீரஜ், இம்முறை பதக்கமின்றி திரும்புவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஒலிம்பிக் சாம்பியனான அர்ஷத் நதீம் 10வது இடமே பிடித்தார்.
Similar News
News September 19, 2025
சனிக்கிழமை, சிரிச்சா போச்சு.. ரோபோ சங்கரின் நினைவுகள்

சிரிச்சா போச்சு, கலக்க போவது யாரு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த ரோபோ சங்கர் உயிரிழந்துள்ளார். ஸ்டாண்ட் அப் காமெடி மட்டுமல்ல நடன நிகழ்ச்சிகளிலும் அவர் கலக்கி வந்தார். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரோபோ சங்கர் ‘மாரி’ படத்தின் சனிக்கிழமை, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ ஜாக்கெட் ஜானகிராமன், ‘விஸ்வாசம்’ படத்தின் மெரிட்டு கதாபாத்திரங்களில் கவனம் ஈர்த்தார்.RIP
News September 19, 2025
மீண்டும் அண்ணாமலை ரிட்டர்ன்ஸ்?

TN BJP தலைமை மாறியதும், கோயில்களில் தியானம் செய்தார் அண்ணாமலை. கட்சியின் தேசிய பொறுப்பு அவருக்கு அளிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், மாநில நிகழ்வுகளில் கூட தலைகாட்டாமல் இருந்தார். இந்நிலையில், TTV, OPS ஆகியோரை சமாதானம் செய்யும் Task-ல் உள்ள அவர், தனது பாணியில் திமுகவை பேட்டியில் விளாச தொடங்கியுள்ளார். இதனால் மீண்டும் அவரின் வாய்ஸ் தமிழக பாஜகவில் ஓங்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News September 19, 2025
ராசி பலன்கள் (19.09.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.