News September 18, 2025

கிருஷ்ணகிரியில் 12ஆம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டம், அலேகுந்தாணி கிராமத்தில் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த புலிகுத்திபட்டான் நடுகல் இன்று செப்டம்பர் 18ஆம் தேதி கண்டெடுக்கப் பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நடுகலில் வீரர் புலியை வெற்றி கொண்ட காட்சியுடன் சிற்பமாக வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கண்டுபிடிப்பு கிராமத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. *மறக்காம ஷேர் பண்ணுங்க*

Similar News

News September 18, 2025

கிருஷ்ணகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்த மாதம் தீபாவளி 2025 வரும் நிலையில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்பும் வியாபாரிகள், அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி 30.09.2025க்கு முன்னர் இ-சேவை மையங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் தெரிவித்தார்.

News September 18, 2025

கிருஷ்ணகிரி: B.Sc, BE, B.Tech, BCA படித்தவரா நீங்கள்?

image

கிருஷ்ணகிரி மக்களே! ஐடி துறையில் சாதிக்க விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ.தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கணினி அறிவியல், ஐடி துறையில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்களுக்கு டெவலப்பர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும் இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் உறுதியாக வேலை ஏற்படுத்தி தரப்படும். இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர்

News September 18, 2025

சென்னையை போல மாறும் ஓசூர்!

image

தமிழ்நாட்டின் தொழில் மற்றும் தொழில்நுட்ப மையமாக ஓசூரை உருவாக்க, மாநில அரசு தீவிரமாகப் பணியாற்றுகிறது. இதன் ஒரு பகுதியாக, ஓசூரில் அவுட்டர் ரிங் ரோடு, சேட்டிலைட் டவுன் ரிங் ரோடு மற்றும் பிற முக்கிய சாலைகளை இணைத்து, ஒரு அறிவுசார் வழித்தடத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், சென்னை போன்று ஓசூரும் ஒரு அறிவுசார் மையமாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!